Posted in Pictures, Poem, Thamizh (தமிழ்)

புது விதி

பாரதியின் 96வது நினைவு நாள்…

IMG_1660

புது விதி

விட்டுக் கொடார்
தொட்டுந் தொடார்
இட்டும் சட்டென
மட்டுப் போட்டார்.

விதிதனை புதிதாய்
இனி செய்ய
தெளியட்டும்
முதலில் இவரவரும்.

Posted in Poem, Thamizh (தமிழ்)

தொடர்பகை

யார் தொடங்கினர் 
தொடரும் இப்பகையினை?
தெரிந்தால் ஒப்புக்கொள்ள 
பகுத்தறிவாளர்களுக்கு இங்கு
கொஞ்சம் பஞ்சம்.
தெரிந்து, தெரிந்த பகையை 
புதிய பரிணாமத்தில் விரித்து
பிரித்து, இன்னல் பல வளர்த்து 
மதத்தோடு மதத்தின் பலம் பார்க்கத்தூண்டும்
மந்தவாதிகளல்லவா நாம்!
Posted in Poem, Thamizh (தமிழ்)

ஹேவிளம்பி

ஹேவிளம்பி

பெற்றது ஒற்றை வெற்றுத்தாள்
வெள்ளை வெள்ளையாய்
உற்றது மற்றொரு நற்பேறு
பச்சை பச்சையாய்
 
வன்மை இன்மையாய்
மென்மை முன்மையாய்
நன்மை பல விளம்பி
வரவேற்போம் ஹேவிளம்பிதனை !
 
 
Posted in Poem, Thamizh (தமிழ்)

காற்றும் கவியும்

இனியும் ஏது தோல்வியே
கவியும் தூது போவதேன்

காற்றே 
சொல்லும்
வெறுமைகளா
பொறுமைகளா
நினைவே 
வெல்லும்
வறுமைகளா
வறுமைகளா

இதையத்தைத் தொட்டுத் தொட்டு நீங்கும்
மரணத்தை விட்டு விட்டுச் செல்லும்
கனிமொழியாய் என்னை நினைப்பாய்
தனிமையிலே என்னை சேர்ப்பாய் 

ஒரு கணமோ இங்கு மவுனம்
மறு கணமோ நீ மறைந்தாய் 
பேசும் ஊமை ஆனேன்
சோகம் தேடிப் போனேன்

மலையின் மீதுள்ள சிகரம்
கலையரசி தந்த பெருவரம்
நிகழ்வு மறக்கவே 
பகடம் பலிக்கவே 

முழு நிலவு மெல்லத் தூங்க
மேகங்களோ அதை மூட 
நட்சத்திரங்கள் கூடி
தாலாட்டு ஒன்று சொல்ல

காலைக் கதிரவன் அகல
காக்கை குருவியும் பறக்க
மகிழ்வு மிகையவே
மனமும் களிக்கவே 
Posted in Poem, Thamizh (தமிழ்)

ஜல்லிக்கட்டு உரையாடல்

வீர விளையாட்டு எனநீர் கூவினால்
வீம்புக்காக வீரம் ஏனய்யா என்பம் நாம்

துள்ளி வரும் நீண்ட கால்களை இடை மறித்து
சுழன்று வரும் வாலை அடக்கிப் பிடித்து
திரண்ட திமிரை அணைத்து, கொம்பிலுள்ள பரிசினைப் பறித்து
காளையை அடகித்தான், உம் ஆண்மையை காட்டுவோம் என்கிறீரே

விழுப்புண்களுக்காக வீரியமாக உடல் வருத்தி
ஏழேழு தலைமுறை கலாச்சாரத்தைக் காக்க
நீர் படும்பாடு புரிகிறதய்யா
எம்பாட்டையும் தான் கொஞ்சம் கேள்வீரோ?

மிருகவதையை தடுக்கவும் மிருக மேம்பாட்டிற்காகவும் உழைப்பவர் யாம்
கலாச்சார சம்பிரதாய சிறப்பறிவோம் யாம்
இவையனைத்தும் பரிணாம வளர்ச்சிக்குட்பட்ட தென்பதையுமறிவோம்
அதை நீறறிவீரோ என்றறியோம்

உங்கள் மாடுகளையும் காளைகளையும் தெய்வமாக மதிப்பீராமே
பின் ஏன் அதைச்சீண்டி கோபமேற்றுகிறீர்கள் உங்கள் வீம்பு வீரத்திற்காக?
அதைச் சீண்டுவதற்காக சிலபலர் செய்யும் சேட்டைகள்
மிருக வதையில்லை என்றும்மால் கூற முடியுமா?

இங்கங்கு சிலபலர் செய்யும் சேட்டைகள் மிருகவதையே
அதை மறுக்கவில்லை மறைக்கவுமில்லை அன்பரே
எங்கள் வீரத்தை எம்மவரிடம் காட்ட உங்கள் அனுமதி தேவையில்லை
என்பதையாமறிவோம் அதை நீறறிவீரோ என்றறியோம்

தேசமெங்கும் வெவ்வேறிடத்தில் பற்பல பரிமாணங்களில்
நடக்கும் மிருகவதைகளைக் காட்டிலுமா இது மிகையென வினவுகிறம் யாம்
காளைகளைச் சீண்டுகிறோம் என்றெங்களடையாளத்தில்
ஒரு பகுதியைச் சீண்டுவது நியாயமா?

மிருகவதையைக் குறைக்க உம்மிடம் பேசத்தயாரய்யா யாம்
எல்லா மிருகவதைகளயும் சமசீர் தராசில் வைத்துப் பின்னர் எம்மிடம் பேசத்தயாரா நீர்?

[இவ்வுரையாடல் தொடரின் பலரும் மகிழ்ச்சி அடைவர்…]


பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

–English Translation–

A Jallikkattu Conversation
—————————

If you argue that it’s a display of bravery,
Then we would question the need for such false bravado..

You say that you would announce your masculinity to the world..
By tripping his long legs, By catching his swinging tail,
By embracing his dark hump,
By snatching the prize that’s tied to his horns,
And by bringing the raging bull under your control.

We understand that
All the rigor that your bodies go through for these war wounds
Are to preserve those century old traditions.
Now, will you step into my shoes and see it from my end?

I work hard for animal welfare and to prevent cruelty towards animals.
I understand culture, heritage and traditions,
I also understand that these things have always evolved and changed with times,
I hope you understand that.

We hear that you worship these bulls and cows,
Then why do you provoke them and flare up their anger?
Just so that you could exhibit your false bravado?
Do you agree what a few people do in order to
Instigate these bulls and cows amount to animal cruelty?

Yes. What a few do here and there certainly amount to animal cruelty.
We don’t deny it nor do we want to hide it, my friend.
At the same time, we know we don’t need your permission
To display our bravado amongst ourselves. I hope you understand that.

There are various animal cruelties of different magnitudes taking place
Around the country, every day.
We wonder why ours is being targeted when there are worse cruelties around.
In the name of preventing animal cruelty by pointing out these bull provocations,
Is it fair on your part to provoke us by banishing an important symbol of our culture?

We are ready to discuss and negotiate the animal cruelties that happen in our sport.
Are you ready to place all animal cruelties that happen in the country on the same weighing scale? If yes, then please come to the negotiation table.

Posted in Poem, Thamizh (தமிழ்)

ப்ரெக்ஸிட் கவிதை (Brexit Poem)

பிரியும் நேரம்
எரியும் பகை

தெரியும் என்றிருந்த
பெரியவரெல்லாம் அமைதி

வரிக்கோடு போட்டதனால்
சுரிப்புறுமா இளமாற்றல்?

வாரியிறைத்தது போதுமென்றழைத்ததனால்
விரிவாகுமா தேசியவாதம்?

பிரிட்டனின் வருங்காலம்
போரிஸ்ஸிடம் இப்பொழுது.

Posted in Poem, Thamizh (தமிழ்)

முரண்நகை

[March 21 is World Poetry Day]
முரண்நகை

அறியாமைக்கும் முட்டாள்தனத்திற்கும் இடையேயுள்ள
தூரம் எவ்வளவென அளக்க முற்பட்டேன்.
எல்லோரும் என்னை இப்பொழுது முட்டாள்
என்றழைக் கிறார்கள்.
ஏனோ?

பேராசைக்கும் பொறாமைக்கும் இடையேயுள்ள
தூரம் எவ்வளவென அளக்க முற்பட்டேன்.
பேராசை இல்லாதவர்களப் பார்த்தால்
பொறாமையாக இருக்கிறது இப்பொழுது.
ஏனோ?

நம்பிக்கைக்கும் நப்பாசைக்கும் இடையேயுள்ள
தூரம் எவ்வளவென அளக்க முற்பட்டேன்.
நம்பிக்கை இருந்தால் நன்றாக இருக்கும்
என்றொரு நப்பாசை வந்து விட்டது எனக்கு இப்பொழுது.
ஏனோ?

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள
தூரம் எவ்வளவென அளக்க முற்பட்டேன்.
அது புலனுணர்வு மட்டுமே என்ற றிந்தபட்சத்தில்
அவ்வெற்றியைக் கொண்டாடுகிறேன் இப்பொழுது
என்னை முட்டாளென்றழைத் தவர்களோடு.

Translation (Loose)

Irony
——
I sought out to find the difference between Ignorance and Stupidity.
They call me stupid these days. I wonder why!

I sought out to find the difference between Greed and Jealousy.
I am now jealous of those who don’t have any greed. I wonder why!

I sought out to find the difference between Faith and Illusion.
Now, I have an illusion that having faith may be good. I wonder why!

I sought out to find the difference between Success and Failure.
Once I found out that it’s just Perception,
I have decided to celebrate my success of attaining that wisdom
with those who called me stupid.

Posted in Poem, Thamizh (தமிழ்)

பசி

பசி

என்னை என் ஏளனமாய் பார்க்கிறாயடா?

காலையும், மாலையும், மத்தியில்

பத்து பதினோறு முறையும் உன்னால்

என்னை நினைக்காமலிருக்க முடியுமாடா?

முட்டாளே..!

என் நினைப்பு வந்து விட்டால்

உன் கனப்பு கூட விட்டுப்போகுமடா சமயத்தில்..

என்னை என் ஏளனமாய் பார்க்கிறாயடா?

போன புதன் கிழமை மூணே முக்கால் மணிக்கு

மண்டையைப் பிளக்கும் உச்சி வெயிலில்,

மஹாலட்சுமி அபார்ட்மெண்டிற்கும் பாக்யலட்சுமி அபார்ட்மெண்டிற்கும்,

இடையே உள்ள சகதி சந்திற்குள்

மூக்கை இறுக்கிப் பிடித்து மூத்திர வாடையை மறைத்து

முன்னூறு அடி முன்னாலே நகர்ந்து

உன்னைப் போலவர்கள் பலர்அடித்து துரத்தி ஆதரவின்றி

திக்குத் திசையில்லாமல் திரிந்து கொண்டிருக்கும் அந்த

நொண்டித் தெரு நாய் பாதி தின்றும் பாதி தின்னாமலும்

விட்டுச் சென்ற நாலு திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி

பொட்டலங்களைப் பதினோறு மணி நேரமாய்

என்னையே நினைத்துக் கொண்டிருந்ததால்,

பக்கத்தில் யாரும் பார்க்கிறார்களா என்று

கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்,

பொத பொதவென்று முழுங்கினாயே

எந்த வித கனப்புமின்றி,

வந்த விக்கலுக்குத் தண்ணி கூட குடிக்காமல்..

ஞாபகமிருக்கிறதாடா மடையா?

இன்னும் ஏன் என்னை ஏளனமாய் பார்க்கிறாயடா எளவு கெட்டவனே?

நீ உயிரோடு இருக்கும் வரை,

என் நினைப்பு உன்னை விட்டுப் போகாதடா..

இந்த வறுமை உன்னைத் துரத்தும் வரை,

என் நினைப்பே உன்னைக் கொன்றுவிடுமடா!

போடா போ!

The beauty of a any poem is lost when one tries to translate it from the original language it was written to another language.
Especially something like this, because there is so much informal and slang based approach to this poem that it just won’t do justice when I try to translate. But still, there are many who won’t even get the main intent of this poem, if I don’t translate. So, here I go…

The poem is a first person monologue by “Hunger”.
Imagine “Hunger” speaking to someone living in poverty.

Why do you look down upon me?
Ho Fool! Don’t you realize that you can’t stop thinking about me every morning, every evening and for about ten, eleven times in between?

You lose your self-pride when you think of me and yet why do you look on me with disdain?

Last Wednesday, at about 3:45 PM, under the wrath of the burning Sun,
In that muddy lane between Mahalakshmi Apartments and Bhagyalakshmi apartments,
You walked about 300 feet forward, with your hands tightly gripping your nose to avoid that urine stench.                                                                                                                                                                                    

And then you hurriedly swallowed what was left in those four packers of biriyani, half eaten by an abused, lame dog, mistreated  by many people just like you have been – 

Completely oblivious to anyone who may have been watching you at that moment, thus forgetting your self-pride because you had been thinking about me for more than 11 hours.                                                                             

Yes, you even ignored those violent hiccups.
Don’t you remember that you ignorant fool?                                                                                                        

What makes you look down upon me even then? Why so much scorn?

As long as you are alive, you will never be able to stop thinking about me.                                                

And as long as this poverty continues to haunt you, my thought itself will kill you.

Get Lost. Just Get Lost!!