Posted in Poem, Thamizh (தமிழ்)

பசி

பசி

என்னை என் ஏளனமாய் பார்க்கிறாயடா?

காலையும், மாலையும், மத்தியில்

பத்து பதினோறு முறையும் உன்னால்

என்னை நினைக்காமலிருக்க முடியுமாடா?

முட்டாளே..!

என் நினைப்பு வந்து விட்டால்

உன் கனப்பு கூட விட்டுப்போகுமடா சமயத்தில்..

என்னை என் ஏளனமாய் பார்க்கிறாயடா?

போன புதன் கிழமை மூணே முக்கால் மணிக்கு

மண்டையைப் பிளக்கும் உச்சி வெயிலில்,

மஹாலட்சுமி அபார்ட்மெண்டிற்கும் பாக்யலட்சுமி அபார்ட்மெண்டிற்கும்,

இடையே உள்ள சகதி சந்திற்குள்

மூக்கை இறுக்கிப் பிடித்து மூத்திர வாடையை மறைத்து

முன்னூறு அடி முன்னாலே நகர்ந்து

உன்னைப் போலவர்கள் பலர்அடித்து துரத்தி ஆதரவின்றி

திக்குத் திசையில்லாமல் திரிந்து கொண்டிருக்கும் அந்த

நொண்டித் தெரு நாய் பாதி தின்றும் பாதி தின்னாமலும்

விட்டுச் சென்ற நாலு திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி

பொட்டலங்களைப் பதினோறு மணி நேரமாய்

என்னையே நினைத்துக் கொண்டிருந்ததால்,

பக்கத்தில் யாரும் பார்க்கிறார்களா என்று

கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்,

பொத பொதவென்று முழுங்கினாயே

எந்த வித கனப்புமின்றி,

வந்த விக்கலுக்குத் தண்ணி கூட குடிக்காமல்..

ஞாபகமிருக்கிறதாடா மடையா?

இன்னும் ஏன் என்னை ஏளனமாய் பார்க்கிறாயடா எளவு கெட்டவனே?

நீ உயிரோடு இருக்கும் வரை,

என் நினைப்பு உன்னை விட்டுப் போகாதடா..

இந்த வறுமை உன்னைத் துரத்தும் வரை,

என் நினைப்பே உன்னைக் கொன்றுவிடுமடா!

போடா போ!

The beauty of a any poem is lost when one tries to translate it from the original language it was written to another language.
Especially something like this, because there is so much informal and slang based approach to this poem that it just won’t do justice when I try to translate. But still, there are many who won’t even get the main intent of this poem, if I don’t translate. So, here I go…

The poem is a first person monologue by “Hunger”.
Imagine “Hunger” speaking to someone living in poverty.

Why do you look down upon me?
Ho Fool! Don’t you realize that you can’t stop thinking about me every morning, every evening and for about ten, eleven times in between?

You lose your self-pride when you think of me and yet why do you look on me with disdain?

Last Wednesday, at about 3:45 PM, under the wrath of the burning Sun,
In that muddy lane between Mahalakshmi Apartments and Bhagyalakshmi apartments,
You walked about 300 feet forward, with your hands tightly gripping your nose to avoid that urine stench.                                                                                                                                                                                    

And then you hurriedly swallowed what was left in those four packers of biriyani, half eaten by an abused, lame dog, mistreated  by many people just like you have been – 

Completely oblivious to anyone who may have been watching you at that moment, thus forgetting your self-pride because you had been thinking about me for more than 11 hours.                                                                             

Yes, you even ignored those violent hiccups.
Don’t you remember that you ignorant fool?                                                                                                        

What makes you look down upon me even then? Why so much scorn?

As long as you are alive, you will never be able to stop thinking about me.                                                

And as long as this poverty continues to haunt you, my thought itself will kill you.

Get Lost. Just Get Lost!!

 

Posted in Poem, Thamizh (தமிழ்)

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து – இன்பப் பெருந்தேடல்

அரி, மறி, தரி, பறி
கெலி, சுளி, மெலி, முளி
பெரிஞ்சேற்றுத் தீங்கான் காணத் தகாவிவ் வையம் நமக்கு
அருஞ்சோற்று அல்லல் இன்னுமுண்டாம் பெருங்குடியமர்க்கு.

அகல், ஆகல், நகல், நோகல்
எழில், ஏழில், நினல், நோனல்
செறுநாற்றுக் கூட்டமாய் விழைந்துச் செம்மணல் வீங்கி
நறுங்காற்றுப் புறமட்டு மல்லாமெங்கும் தங்கிப் பெருகுமே!

இன்னல், அன்னலுறித்து, இன்பப் பெருந்தேடலை
இப்பொங்கல் நன்னாளில் உற்றேத் தொடங்குக!

A feeble attempt to translate the above in English:

Obstruction (of) Sun, Appropriation (of) Wealth
In Denial (of )Desire, (some) Burn (and) Perish
This world is filled with unbearable scandalous evils
And there still are many, who strive for one good meal

Light Stops (in) Agony (of) Dishonesty
Musical Beauty (is a) Mirage (we) Endure
Let our lands be filled with Robust Crops
Let the Gentle Breeze not merely pass us, but energize us instead!

Let us free ourselves from all the obstacles with clarity and let our search for eternal happiness begin on this Pongal Day!

Posted in Poem, Thamizh (தமிழ்)

பொங்கலோ பொங்கல் (Happy Pongal)

உழவனின் வாழ்வு உயர

உழவுத் தொழிலும் நிமிர,

கழிவோம், கழன்றன மறவோம்

பழியோம், பழித்திடும் பிறவோரை.

உயர்ந்து, அயர்ந்து, பயிர்த்த பயிரெல்லாம்

உறித்து, கொறித்து , வியர்த்துச் செழித்திட,

உங்கள் இல்லதுக் கடைசித் தானியமும்

உவக்கும் மங்களத்தில் புடைத்துத் தானாட,

இங்கும், அங்கும், எங்கும், மங்களம் பொங்கிட

பொங்கிய மங்களம் தங்கித் தங்கிட,

இன்றும், அன்றும், என்றும், எவ்வளமும் வீங்கிட

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Posted in Podcast, Thamizh (தமிழ்)

Independence Day Podcast

My first attempt at Podcasting..

Happy Indian Independence Day.

Here is the text of the message..

————————————————————–

சுதந்திரம் என்பது ஒரு நிலையே. சாதனையன்று.

ஆயினும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் தவறில்லை என்ற கருத்தைக் கொண்டவன் நான். அப்படிச் சிந்திக்கும்பொழுது, எந்த முறையில் கொண்டாடுவது சரியென்கிற கேள்வியெழுகிறது எனக்குள்.

நான் பார்த்தவரை, கேட்டவரை, உணர்ந்தவரை, இந்தியாவில் இன்னும் பலர், தமது தேசிய சுதந்திர தினத்தை, 100,200 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவங்களை நினைவு கொண்டு, அவற்றை மட்டுமே நினைவு கொண்டும், கண்ணீர் சிந்தியும், சிலைகளுக்கு மலர் கோப்புகளிட்டும், அச்சம்பவங்களைச் சார்ந்த இதர பல செய்கைகள் மூலமாகவும் கொண்டாடுவதையே இத்தினத்தின் இழைமானமாக ஆக்கிவிட்டார்களோ என்ற ஐயம் எனக்குள் எழுகிறது.

நடந்து வந்த பாதையை நினைவு கொள்வது நன்று. அது அவசியம்.
ஆனால் அது முடிந்து போன கதை.
நாம் முன்னால் நடக்கக்கிவிருக்கின்ற பாதையைப் பற்றி யோசிக்காமல், நடந்து வந்த பாதையின் பெருமையைப் பற்றிப் பேசி, பேசியே காலத்தைப் போக்கினால், நாம் அடுத்து எடுத்து வைக்கும் அடி தவறான அடியாக இருக்க சாத்தியங்கள் அதிகம்.
ஒருவேளை அச்சாத்தியக் கூறுகளினால் வரும் பயத்தாலேயே அடுத்த அடி எடுத்து வைக்காமல் போய்விடுவோமோ என்ற பயம் கூட உண்டு எனக்கு.

எது சரி என்று சொல்கிற தெளிவு இன்னும் எனக்குள்ளிலெங்கிலும், பழங்கதைகளையும், நம் நாட்டை, நம் நாட்டாக்கியச் சரித்திரதத்தையும் கொஞ்சம் நினைவு கொண்டு, நினைவு மட்டுமே கொண்டு, அடுத்து நாம் என்ன சாதனைகள் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம், அதற்காக இப்பொழுது நாம் நம்மை எப்படித் தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதே சுதந்திர தினத்தின் மெய்ப்பாடாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். கொண்டாட்டங்கள் அனைத்தும் அவற்றைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.

அனைவரும் புதுச்சாதனைகளை நோக்கிச் செல்ல என் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

Here is an attempt to translate the above:

Independence is a state of living and not an achievement by itself.
Yet, I have no qualms celebrating Independence day. In that context, I question myself as to what kind of celebrations are apt for Independence day.

From what I have seen, experienced and heard, most people in India tend to celebrate Independence day only by remembering events & incidents that happened 100 or 200 years ago. They do that perhaps by shedding tears, garlanding statues and doing things that are somehow related to those events. I doubt if they have made such a tradition alone define the characteristic of that day.

It’s good to remember the path that has brought us here. It’s important.

But that’s history.

If we continue to relive in the past by cherishing our past glory instead of our path forward, then the the probability of the next step we take being a misstep is high.

And I also doubt that we may not take the next step at all, for the fear that arises out that probability.

Even though I don’t have the clarity to say what is right and what is wrong, I feel, as a country we should start thinking about our future goals and how we are preparing to achieve those goals, while continuing to remember our past glories (just remember). This, in essence, should define how we celebrate Independence Day. Our celebrations should focus on that aspect.

Wishes to achieve glorious feats in future. Wishes to all those who celebrate Independence Day.

Posted in Thamizh (தமிழ்)

தமிழில் எழுத முயற்சி (An attempt to blog in Thamizh)

“ப்லாக்” ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆன பிறகு தமிழில் எழுதும் முயற்சி இது. முயற்சி திருவினையாகும் என்பார்கள்.  என் முயற்சியோ இது வரை என் கைகளுக்கு கசப்பாகவும், கண்களுக்கு இனிமையகவும் இருந்து கொண்டிருக்கிறது…எனினும், திருவினையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையே இந்த முயற்சியை நான் தளற விடாமல் இருக்க உந்துதலாக இருக்கும்.

பெரிதாக எதுவும் தமிழில் எழுதி சாதிக்காவிட்டாலும், சிறிதாக அவ்வப்பொழுதெழுதி, சிற்றின்பம் பெற்றுக்கொள்ளலாம் என சிந்தித்து, இத்தோடு முதல் முயற்சிக்கு முழுமனதோடு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

(பிழை ஏதும் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் – Typoக்களை சரி செய்ய பயன் படுத்திக் கொள்வேன் உங்கள் கருத்துக்கள் மூலம்…)

** The above loosely translates to the following:

“After almost 4 years of blogging, this is my first attempt to blog in Thamizh. They say that “practice makes perfect”. But my practice so far has given me bitter hands and sweet eyes. But the hope that the day of perfection is not too far away, motivates me to continue. I don’t think I am going to create Thamizh master pieces here but I am ending this post with the thought that at least, I will be able to derive small pleasures out of this”.

**